திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் குறித்து பார்வையாளர் சி.முனியநாதன் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      திருவாரூர்
Thiruvarur 2017 12 08

 

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் திருத்த பார்வையாளர் சி.முனியநாதன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமை வகித்தார்.

ஆலோசனை

இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பார்வையாளர் சி.முனியநாதன் தெரிவித்தாவதுஇந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு இயக்கம் 2018-ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 8 ஆயிரத்து 735 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. பெயர் நீக்குவதற்கு 19 ஆயிரத்து 844 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பெயர் நீக்கப்பட்டுள்ளது. இடமாறுதலுக்காக 1207 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இடமாற்றப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு இயக்கம் 2018-ன்படி வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியானது டிசம்பர் -15ம் தேதி வரை நடைபெறுகிறது. 18 வயது நிறைவடைந்து இதுநாள் வரை உள்ளவர்களும், அதாவது 31.12.1999 வரை பிறந்தவர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம்-6-ஐ பெற்று அதனை பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வதற்கு படிவம் 7-லும் திருத்தம் செய்வதற்கும் படிவம்-8-ம் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு படிவம் 8யு-விலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் 15.12.2017 அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துமீனாட்சி, செல்வசுரபி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) சொக்கநாதன் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள்,நாகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து