பிளாஸ்டிக் தயாரிப்பில் தமிழகமே முதலிடம் பிளாஸ்ட் இந்தியா தலைவர் சேகர் தகவல்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      சென்னை

பிளாஸ்டிக் தயாரிப்பிலும், நுகர்விலும் தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக பிளாஸ்ட் இந்தியா 2018 கண்காட்சியின் தென்னிந்திய தலைவர் சேகர் தெரிவித்தார்.

கண்காட்சி

 பிளாஸ்ட் இந்தியா 2018’ கண்காட்சியின் தேசிய மேம்பாட்டுக் குழுவின் தென்னிந்தியத் தலைவரான .. சேகர் தெரிவித்தார்.தென்னிந்தியாவில் 9 லட்சம் டன்னுக்கும் அதிகமான அளவில் பிளாஸ்டிக் நுகர்வினைக் கொண்ட மாநிலமாகவும், தேவைக்கேற்ப உற்பத்தியை மேலும் அதிகரித்து வரும் மாநிலமாகவும் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில் பிளாஸ்டிக் சார்ந்த வணிகத்தின் மூலம் 18,000 கோடிக்கும் அதிகமான வருவாயை இத்தொழில் ஈட்டித் தருகிறது.

சிறு, நடுத்தர தொழில் பிரிவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் தொழிலகங்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இம்மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறது" இந்தியாவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் தொழிற் கண்காட்சியான பிளாஸ்ட் இந்தியா 2018’வரும் பிப்ரவரி 7 முதல் 12 வரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. " தொழில்துறைகளுக்கு உரிய பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பில் சென்னை புகழ்பெற்று விளங்குகிறது.

நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்றவாறு தயாரிப்புகளை மேம்பாடு செய்வதும், தொழில்நுட்பத்தில் தொடர்ந்து மாற்றங்களை செய்து வருவதும் இத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து