பொன்னேரியில் டாக்டர்.அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பல கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      திருவள்ளூர்
Ponneri 2017 12 08

பொன்னேரியில் டாக்டர்.அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பல கட்சி பிரமுகர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.அண்ணா தி.மு..சார்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்,பொன்னேரி எம்.எல்..சிறுணியம் பலராமன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மரியாதை

உடன் ஒன்றியசெயலாளர் மோகனவடிவேல்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைசெயலாளர் பானுபிரசாத்,பொதுக்குழு உறுப்பினர் பொன்னுத்துரை, முன்னாள் பேரூராட்சித்தலைவர்கள் பா.சங்கர், மோகனசுந்தரம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைசெயலாளர் கோளூர் கோதண்டன்,கழக நிர்வாகிகள் காணியம்பாக்கம் சம்பத்,திருப்பாலைவனம் ராதாகிருஷ்ணன்,வேளூர் ரோஜாராஜா, திருவெள்ளைவாயல் மலையப்பன்,ஏலியம்பேடு சிவா, தடப்பெரும்பாக்கம் சதா, பொன்னேரி நாகராஜ், சம்பத், முனுசாமி, சவுக்கத் அலி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் அம்பேத்கரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில் கல்லூரி முதல்வர் முனைவர் கருப்பன்,பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பெரவள்ளூர் ராஜா,விளையாட்டுத்துறை செயலாளர் கோகுல் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். சமீபத்தில் வெளியான அறம் திரைப்பட இயக்குநரும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளுர் கோபி நாயனார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.உடன் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் அமரக்கவி,நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நெடுஞ்செழியன்,மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன்,தெற்கு ஒன்றிய செயலாளர் உமாபதி,பொன்னேரி நகரச்செயலாளர் மதன்,மீஞ்சூர் நகரச்செயலாளர் சந்திரசேகர்,தொகுதி துணை செயலாளர் சிவராஜ்,முன்னாள் ஒன்றியசெயலாளர் சேகர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாவட்டபொருளாளர் பெரவள்ளூர் ராஜா மாலை அணிவித்தபோது உடன் சரவணன்,பார்த்திபன்,விக்ரம்,வள்ளல் உள்ளிட்ட தொண்டர்கள் உடனிருந்தனர்.பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இளஞ்செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து