கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      ஈரோடு
04

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் 2017 ஆம் ஆண்டிற்கு கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்கப்
பயிற்சி 07.12.2017 மணிக்கு துவங்கப்பட்டது.

இப்புத்தாக்கப் பயிற்சி வகுப்பிற்கு வருகை புரிந்தவர்களை ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர்ஃபணியாளர் அலுவலர் அ.மீனாஅருள்  வரவேற்புரையாற்றினார்கள்.  ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்.மு. முருகன் தலைமை வகித்து பயிற்சியினை துவக்கி வைத்து உரையாற்றிய போது  கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு இப்புத்தாக்கப்பயிற்சி ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.  அதேபோல இவ்வாண்டும் இப்புத்தாக்கப்பயிற்சி 07.12.2017 மற்றும் 08.12.2017 ஆகிய இருதினங்கள் நடைபெறும்.  புத்தாக்கப்பயிற்சி என்பது துறை அலுவலர்களுக்கு தேவையான ஒன்றாகும்.  ஒருஆண்டில் பல்வேறு சுற்றறிக்கைகள் மாநிலப்பதிவாளர்  அலுவலகத்திலருந்து வெளியிடப்படுகின்றன.அதெயெல்லாம் தொகுத்து இப்புத்தாக்கப் பயிற்சியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. புத்தாக்கப் பயிற்சி என்பது புதிதாக ஆக்கப்பட்ட பயிற்சி ஆகும்.  நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இப்புத்தாக்கப்பயிற்சியில் பொது விநியோகத்திட்டம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினி மயமாக்குதல், அரசு திட்டங்களான கூட்டுப்பொறுப்புக்குழு, பொது சேவைமையம், வேளாண் மருந்தகம், வேளாண் பொறியியல் மையம், யோகா, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் தொழில் அபிவிருத்தி தொடர்பாகவும், சட்டபூர்வ பணிகள், மனிதவள மேம்பாடு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தமிழ் ஆட்சிமொழி செயலாக்கம் குறித்தும் விரிவாக
பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
 
கூட்டுறவுத்துறையில் அதிக அளவில் சங்கங்கள் உள்ளன.  கூட்டுறவுத்துறை முக்கியமாக கடன், விற்பனை, நுகர்வோர்நலம் போன்ற பலபிரிவுகளில் பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. பணியாளர்கள் திறம்பட செயல்படவேண்டும் என்றால் திறமை இருக்க வேண்டும்.  திறமையாக இருக்கவேண்டும் என்றால் பயிற்சி மிகவும் அவசியம்.

இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள அலுவலர்கள் பயிற்சியினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  பணியில் பயிற்சி, முயற்சி இவை இரண்டும் மிகவும் அவசியம். அலுவலக நடைமுறைகளை தௌளத்தெளிவாக அறிந்து கொள்ள இப்பயிற்சி முக்கியமானதாகும்.   கூட்டுறவுத்துறையின் முதுகெலும்பாக உள்ள அலுவலர்கள் பயிற்சியில் பயனடைய வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

 இப்புத்தாக்கப்பயிற்சியில் ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி
இணைப்பதிவாளர்ஃமேலாண்மை இயக்குனர் எஸ். யசோதாதேவி முன்னிலையுரை ஆற்றினார்கள்.  இப்பயிற்சியில் ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர்ஃமுதன்மை வருவாய் அலுவலர்  அ. அழகிரி , ஈரோடு  வேளாண்மை  உற்பத்தியாளர்கள்   கூட்டுறவு   விற்பனை      சங்க துணைப்பதிவாளர்ஃமேலாண்மை இயக்குனர்.ப. கந்தராஜா ஈரோடு கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் கே.எஸ்.நந்தகுமார்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

புத்தாக்கப்பயிற்சி துவக்க நாளன்று தேசிய பயிற்றுனர் டாக்டர். சந்திரமோகன் ஆழவழஎயவழைn யனெ பழயடள யனெ வயசபநவள  என்ற தலைப்பிலும், டாக்டர். எஸ்.கே. செந்தில்ராஜன் மற்றும் டாக்டர். என்.எஸ்.எஸ். பத்மாவதி அவர்களால் “இயற்கை வாழ்வியல் கலை” என்ற தலைப்பிலும், பேராசிரியர்.ச. சேதுபதி “ஆனந்த வாழ்வு” என்ற தலைப்பிலும் துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  இப்பயிற்சியில் 100 அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து