முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி, தாயாருக்கு பாகிஸ்தான் விசா வழங்கி உள்ளது: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தகவல்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத் :  குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி- தாயாருக்கு பாகிஸ்தான் விசா வழங்கி உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறி உள்ளார்.

இந்தியா கடும் எதிர்ப்பு

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் பாதுகாப்பு துறை தொடர்ந்த வழக்கில் அந்நாட்டின் ராணுவ கோர்ட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் அவருக்கு மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த அடாவடி செயல் இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானின் செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  அதேபோல், குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து இந்திய தரப்பில் மேல்முறையீடும் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஜாதவ் விவகாரம் தொடர்பாக இந்திய அரசு சர்வ தேச நீதிமன்றத்தில் முறையிட்டது. மரண தண்டனையை ரத்து செய்ய இந்தியா கோரிய மனுவை ஆய்வு செய்த சர்வதேச நீதிமன்றம் ஜாதவிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் அனுமதி

இதற்கிடையே, குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி சந்திக்க பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் கடந்த நவம்பர் மாதம்  அனுமதி அளித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் சிறையில் வாடி வரும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை பார்க்க வரும் அவரது மனைவிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கோரிக்கை வைத்தது. பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷன் ஜாதவை  தேசிய சிறைச்சாலையில்  தாய் மற்றும் மனைவியை  சந்திக்க வருகிற 25-ம் தேதி பாகிஸ்தான் அனுமதி அளித்து உள்ளது.

இந்த சந்திப்பின் போது இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையத்தின் அதிகாரி ஒருவர்  கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார் என்றும் பார்வையாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனை பாகிஸ்தானிய வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் டாக்டர் முகமது பைசல் நேற்று தெரிவித்தார்.

விசா வழங்க ஒப்புதல்

இது குறித்து வெளிவிவகார துறை அமைச்சர் சுஷ்மிதா சுவராஜ் கூறியதாவது:-
பாகிஸ்தானின் அரசாங்கம் குல்பூஷன் ஜாத்வாவின் தாய் மற்றும் மனைவிக்கு விசா வழங்கும் என்று தெரிவித்துள்ளது. குல்பூஷன் ஜாதவின்  தயார்  அவந்திகா ஜாதவிடம் நான் பேசியிருக்கிறேன் இதை பற்றி அவர்களிடம் தெரிவித்து உள்ளேன்.  முன்னதாக பாகிஸ்தான் குல்பூஷன் ஜாதவ் மனைவியிடம் விசா வழங்க ஒப்புக்கொண்டது. இதையொட்டி நாங்கள் தாயாருக்கும்  விசா வழங்க பாகிஸ்தானை கேட்டுக் கொண்டோம். பாகிஸ்தானில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்  பற்றி நாங்கள் கவலையையும் எழுப்பினோம்.

பாதுகாப்புக்கு உறுதி

பாகிஸ்தான் அவர்கள் இருக்கும்போது இந்திய தூதரகத்தின் தூதரக அதிகாரியும் அவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். பாகிஸ்தானில் குல்பூஷன் ஜாதவின்  தாய் மற்றும் மனைவியின் வருகைக்கு உதவுவதற்காக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டதுடன் பாகிஸ்தானில் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான செயல்பாட்டிற்கு  உறுதி அளித்து உள்ளதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து