முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் தமிழக மீனவர்களுக்கு டீசல் வழங்கும் பணி தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

அகமதாபாத் :  குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான டீசல் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

700 மீனவர்கள்...

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மாயமான மீனவர்களில் பலர் பல்வேறு மாநிலங்களிலும் கரைசேர்ந்தனர். குறிப்பாக தமிழக மீனவர்கள் 700 பேர் குஜராத் மாநிலத்தின் வேரவல் கடற்பகுதியில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.

டீசல் வழங்கும் பணி

இந்நிலையில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவில் கரைசேர்ந்த தமிழக மீனவர்களை அழைத்து வருவதற்காக, ஒரு விசைப்படகிற்கு வழங்கப்படும் டீசலை 1000 லிட்டராக உயர்த்தி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான டீசல் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இது மீனவர்கள் தமிழகம் திரும்ப பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து