முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்: ஐ.நா. சபை நிராகரிப்பு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் என்ற அமெரிக்காவின் அறிவிப்பை  ஐ.நா. பாதுகாப்பு சபை நிராகரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்கள் கொண்ட குழு ஆலோசனை மேற்கொண்டது. இந்த கூட்டத்தின் முடிவில் ஜெருசலேம் தொடர்பான பிரச்சனை பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். எங்களைப் பொறுத்தவரை ஜெருசலேம் இரு நாட்டுக்கும் பொதுவான தலைநகரமாகதான் உள்ளது என்று ஐந்து ஐரோப்பிய நாடுகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளதை ஐ. நா. சபை நிராகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து