முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் தலைவராக ராகுல் அடுத்த வாரம் அறிவிப்பு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அடுத்த வாரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறார்.

காங்கிரஸ் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக சோனியா காந்தி இருந்து வந்தார். சமீப காலமாக அவரது
உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை காரிய கமிட்டி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராகுல் காந்தி கடந்த 4ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ராகுல் காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அடுத்த வாரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறார். காங்கிரஸ் தலைவராக வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காங்கிரஸ் தலைவராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து