முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட, தியாகங்கள் பலபுரிந்த பாரம்பரியப் பெருமைமிக்க காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் சோனியா காந்திக்கு 72-வது பிறந்தநாள் வாழ்த்துகளை, கலைஞர் சார்பிலும் தி.மு.க. சார்பிலும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

உலக அரங்கில் இந்தியா தனிச் சிறப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, மதச்சார்பற்ற, சோஷலிச - ஜனநாயக சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் திறன் வாய்த்திடப் பெற்ற தலைவராக சோனியா காந்தி திகழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த சோனியா காந்தி, முழுமையான ஆரோக்கியத்துடனும் நிறைவான மகிழ்வோடும் மேலும் பல்லாண்டு வாழ வேண்டும் எனவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபட வேண்டும் எனவும் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க. ஸ்டாலின் அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து