முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்முலா-1 கார்பந்தயம்: உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் லிவீஸ் ஹாமில்டன்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

பாரிஸ் : aபிரான்சில் உள்ள அரண்மனையில் பார்முலா-1 கார்பந்தய வீரரான லிவீஸ் ஹாமில்டனுக்கு உலக சாம்பியன்ஷிப் டிராபி வழங்கப்பட்டது.

கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார்ப்பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான பார்முலா ஒன் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து வீரரான ஹாமில்டன் பட்டம் வென்றார். 32 வயதான ஹாமில்டன் பார்முலா1 சாம்பியன்ஷிப் பட்டத்தை ருசிப்பது இது 4–வது முறையாகும்.ஏற்கனவே 2008, 2014, 2015 ஆண்டுகளிலும் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். இந்த ஆண்டு முழுவதும் வலுவாக செயல்பட்ட ஹாமில்டன் பட்டம் வெல்வதற்கு தகுதியானவர் என்று வெட்டல் பாராட்டினார். அதே சமயம் இந்த மாதிரியான முடிவுடன் (9–வது இடத்துக்கு பின்தங்கியதை குறிப்பிட்டு) பட்டத்தை வெல்வதில் உண்மையான திருப்தி இல்லை என்று ஹாமில்டன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பிரான்சில் உள்ள அரண்மனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு உலக சாம்பியன்ஷிப் டிராபி வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்தது. அதே போல் வருகின்ற ஆண்டுகளும் அமைய கடினமாக உழைப்பேன் என தனது ரசிகர்களிடம் கூறினார். ஹாமில்டன் இந்த ஆண்டு நடைபெற்ற 20 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்றார். இந்த மகுடத்தை அதிக முறை சூடியவர்களின் பட்டியலில் ஜெர்மனியின் மைக்கேல் ஷூமாக்கர் (7 முறை), அர்ஜென்டினாவின் ஜூவான் மானுல் பாங்கியோ (5 முறை) ஆகியோருக்கு அடுத்து பிரான்சின் அலைன் புரோஸ்ட், ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டலுடன் (இருவரும் தலா 4 முறை) ஹாமில்டன் 3–வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து