முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கர் பச்சான் இயக்கிய களவாடிய பொழுதுகள்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

கலை என்பது மக்களுக்கானது. மக்களின் நெஞ்சங்களை விட்டு என்றைக்கும் நீங்காத திரைப்படங்கள் எப்பொழுதாவது ஒன்று அரிதாகவே அமைகிறது. அழகி,சொல்ல மறந்த கதை,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் மற்றுமொரு சிறந்த படைப்பாக நீண்ட கால காத்திருப்புக்குப்பின் களவாடிய பொழுது திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது.

காதலின் வலியை அதன் அனுபவத்தை உணராத அதனை கடந்து செல்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். காதலிக்கின்ற அனைவருக்கும் அது கை கூடுவதில்லை.அழகி திரைப்படம் காதலிக்காதவர்களைக்கூட கலங்க வைத்தது போலவே களவாடிய பொழுதுகள் படமும் அனைவரின் மனதையும் கலங்க வைக்கும் படைப்பாக உருவாகி இருக்கிறது.

இக்கதையை படித்து முடித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து தன் வாழ்நாளில் இதுவரை நடிக்காத பாத்திரத்தில் என்னை மறந்து பொற்செழியன் என்னும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன் என பிரபுதேவா மெய் சிலிர்க்கிறார். அதேபோல் என்றும் மக்களின் மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ் ராஜ் மிக அதிகமான நாட்களை ஒதுக்கி நடித்திருக்கிறார்.

அதேபோல் பூமிகாவின் பாத்திரமும் அனைவரையும் கவரக்கூடியது. ஏற்றுக்கொண்ட ஜெயந்தி என்னும் பாத்திரமாகவே மாறி அவர் வாழ்ந்திருக்கிறார்.இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்தியராஜ்,கருப்பு ராஜா,சத்தியன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒரு பாடலை அறிவுமதியும்,மற்ற நான்கு பாடல்களை வைரமுத்துவும் எழுயுள்ளனர்.

இசையமைப்பு பரத்வாஜ், கலை கதிர், படத்தொகுப்பு பி.லெனின் மற்றும் பிரேம் கையாண்டுள்ளனர். காதலிக்க போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம்.காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்தகால நினைவூட்டலாக இப்படத்தை படைத்திருக்கிறேன் என ளிப்பதிவுடன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கின்ற தங்கர் பச்சான் சொல்கின்றார்.

தரமான படங்களையும்,பல வெற்றிப்படங்களையும் தந்த ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தனது படங்களிலேயே மிகவும் தனக்குப் பிடித்த படம் என தயாரிப்பாளர் கருணாகரன் பெருமையுடன் சொல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து