முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி கலெக்டர் வெங்கடாசலம், தலைமையில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      தேனி
Image Unavailable

தேனி-தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், 2014-15 மற்றும் 2015-16 ஆகிய கல்வியாண்டில் படித்து பயிற்சி பெற்றவர்களுக்கான  பட்டமளிப்பு விழா   மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்  தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற 55 மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்றதற்கான பட்டங்களை (சான்றிதழ்கள்) மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்.
 மாவட்ட  கலெக்டர்  தெரிவிக்கையில்,
தமிழக அரசு மாணவ, மாணவியர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், படித்து பயிற்சி பெற்றவர்களுக்கு இவ்வாண்டு முதன்முறையாக பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இன்றைய காலகட்டத்தில் நிறைய மாணவ, மாணவியர்கள் படித்து பட்டம் பெற்றுவருகின்றனர். அரசு வேலைக்கு செல்ல அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசினால் நடத்தப்பட்டு வருகின்ற பல்வேறு தேர்வுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
  தமிழக அரசு படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும், நிலையான வருவாயினை ஏற்படுத்திடவும் புதிய தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளே தனியாக பயிற்சி அளித்து  வங்கிக்கடனாக நீட்ஸ் திட்டத்தின் மூலம் ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை 25 சதவீத மானியத்தில் கடனுதவியும் அளித்து வருகிறது. இன்றைய இளைஞர்கள் தொழிலினை நன்கு அறிந்து, அதனை முறையாக செய்து சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாகிறார்கள். இதற்கு கல்வி என்பது முக்கிய பங்காகிறது. பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்கள் இப்பயிற்சி நிலையத்தில் பெற்ற பயிற்சியினை கொண்டு தங்களுக்கும், தங்களது குடும்பத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
 இவ்விழாவில், அரசு தொழிற் பயிற்சி நிலைய மேலாண்மைக்குழுத்தலைவர்  அமர்நாத்   தேனி அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்  ரவிச்சந்திரன்   போடிநாயக்கனூர் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்  வேலுச்சாமி   கண்காணிப்பாளர்  மருதுபாண்டியன், அரசு தொழிற் பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து