முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்த்திபனூர் வந்த வைகை தண்ணீர் கலெக்டர் முனைவர் நடராஜன் மலர் தூவி திறந்துவிட்டாhர்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவடடட விவசாயத்திற்காக வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணைக்கு வந்ததை தொடர்ந்து கலெக்டர் முனைவர் நடராஜன் மலர்தூவி வரவேற்று திறந்துவிட்டார்.
     ராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு வடகிழக்கு பருவ மழை பெய்யாத காரணத்தினால், விவசாயிகள் தங்களது வேளாண்மை பணிகளுக்கு போதிய நீரின்றி சிரமப்பட்டு வருகின்றனர். தொடர் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததோடு ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டமும் குறைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்த்திபனூர் மதகணை முதல் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை 54 கி.மீ தூரம் வைகை ஆறு செல்கிறது. வைகை ஆற்றில் விவசாய பயன்பாட்டிற்காக வைகை அணையிலிருந்து கடந்த 18.01.2016 அன்று நீர் திறந்து விடப்பட்டது. அதன்பின்னர் இதுநாள் வரையில் ஆற்றில் நீர்வரத்து இல்லாத காரணத்தினால் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நீர் ஆதாரங்களில் நீரூற்று திறன் மிகவும் குறைந்து ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள கிணறுகள் வரண்ட நிலையில் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடினால் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விவசாய நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில்,  வைகை அணையின் நீர்மட்டம் சுமார் 58 அடியை கடந்தது. எனவே ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் வைகை அணையில் தற்போது இருப்பில் உள்ள வைகை பங்கீட்டு கணக்கு நீரிலிருந்து, நீர் திறப்பு விதிகளுக்கான விகிதாச்சார அடிப்படையில் பங்கீடு செய்திட ஏதுவாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீர் திறந்து விட நடவடிக்கை மேற்கொண்டால் தண்ணீர் பிரச்சினைகள் தீரும் என தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டனிடம் கலெக்டர் முனைவர் நடராஜன் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். இதனை ராமநாதபுரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டுவிழாவில் முதல்அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் காத்திடும் வகையில் வைகை அணையிலிருந்து போதிய அளவு தண்ணீர் திறந்து விட உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்து டிசம்பர் 5 ஆம் தேதி  அன்று தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார். வைகை அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று பார்த்திபனூர் மதகணையை வந்தடைந்தது. இந்த தண்ணீரை மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் திறந்துவைத்து மலர் தூவி வரவேற்றார்.
     இந்நிகழ்வின்போது கலெக்டர் தெரிவிக்கையில், தமிழ்நாடு நமுதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு டிசம்பர் 5 ஆம் தேதி முதல் வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று இங்கு வந்தடைந்து உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மொத்தம் 14120 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் டிசம்பர் 5 ஆம் தேதி 3000 கன அடி வீதம் திறக்கப்பட்டு அதற்கு அடுத்த நாட்களில் படிப்படியாகதண்ணீர்  திறக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி வட்டங்களுக்குட்பட்ட கிராமப்புறம் மற்றும் நகர்புறம் நிலத்தடி நீர் மட்டம் மேம்படும்,என்றார். அப்போது  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(கீழ்வைகைவடிநிலக்கோட்டம்) எஸ்.வெங்கட கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் பி.எஸ்.செய்யது ஹபீப், ஜி.ராமகிருஷ்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜு உள்ளிட்டோரும், கீழ் வைகை வடிநிலக்கோட்ட உதவி பொறியாளர்களும், வைகை பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து