முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் பதட்டத்துக்கு அமெரிக்காவே காரணம்: வடகொரியா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

பியான்கியாங்: வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் நாளுக்கு நாள் போர் பதட்டம் அதிகரித்து வருகிறது. இந்த அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவும் தென்கொரியாவும் தொடர்ச்சியாக போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் போர் பதட்டத்தை தணிக்க ஐ.நா. சபையின் மூத்த தூதர் ஜெப்ரீ பெல்ட்மேன் கடந்த 5-ம் தேதி திடீர் பயணமாக வடகொரியா சென்றார். அங்கு 4 நாட்கள் முகாமிட்டு அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் உட்பட பல்வேறு மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

அவர் தனது பயணத்தை நிறைவு செய்ததை  தொடர்ந்து வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கொரிய தீபகற்பத்தில் நடத்தி வரும் போர் ஒத்திகைகளால் பதட்டம் அதிகரித்து வருகிறது. அணு ஆயுத போர் பதற்றத்துக்கு அமெரிக்காவே காரணம். ஐ.நா. தூதரின் பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது. வடகொரியாவும், ஐ.நா. சபையும் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பெய்ஜிங்கில் கூறுகையில், வடகொரியா விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கான கதவு மூடப்படவில்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து பதட்டத்தை  தணிக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து