முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரவு நேரத்தில் இளைஞர்கள் நடத்திடும் அதிவேக பைக்ரேஸ்:திருமங்கலம் பகுதியில் பொதுமக்கள் அச்சம்:

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் நடத்திடும் அதிவேக பைக்ரேஸ் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பைக்ரேஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது சென்னை மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் பீச் பகுதியும் தான்.தற்போது காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக சென்னை மாநகரத்து இளைஞர்கள் நடத்திடும் பைக்ரேஸ்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் செல்வாக்கு மிகுந்த குடும்பத்து இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பொழுது போக்கிற்காக இரவு நேர பைக்ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர்.கிளம்பியவுடன் 80 முதல் 100கி.மீ வேகத்திற்கு பாய்ந்திடும் பைக்குகளை பயன்படுத்திடும் இவர்கள் முதலில் திருமங்கலம் நகரின் நுழைவு வாயிலான மறவன்குளம் மேம்பாலத்திலிருந்து நான்குவழிச்சாலை பைபாஸ் வழியாக விருதுநகர் சென்று திரும்புவது அல்லது விருதுநகரில் உணவருந்திவிட்டு வருவது என்ற அடிப்படையில் போட்டி போட்டு அதிவேக பைக்ரேஸில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் தற்போது இரவு நேரங்களில் மறவன்குளம் பேருந்து நிறுத்தத்தில் இந்த பைக்ரேஸை தொடங்கிடும் இளைஞர்கள் தங்களது அதிவேக பைக்குகளை ஓட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் திருமங்கலம் நகருக்குள் செல்ல ஆரம்பித்துள்ளனர்.ஒளிரும் எல்ஈடி விளக்குகள் மற்றும் அலறிடும் மப்பு சைலன்சர்களுடன் பயங்கர சத்தத்துடன் வரும் இந்த பைக்குகளை கண்டு பொதுமக்கள் அச்சத்துடன் விலகிஓட வேண்டியுள்ளது.சில நிமிட இடைவெளியில் வந்திடும் இந்த பைக்குகளை பார்க்கும் போது பைக்ரேஸ் நடப்பது யாருக்கும் தெரியாது.ஆனால் மேலக்கோட்டை பகுதியில் நான்கு வழிச்சாலையை தொட்ட பின்னரே இந்த பைக்குகள் தங்களது முழுவேகத்தை எட்ட ஆரம்பிக்கின்றன.பொழுது போக்கிற்காக இளைஞர்கள் நடத்திடும் இந்த பைக்ரேஸ் பொதுமக்களின் உயிருக்கு உலை வைப்பது போல் நடைபெற்று வருகிறது.
திருமங்கலம் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் போதுமான அளவு போலீசார் இல்லாததால் பைக்ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடுகிறது.பெரும்பாலும் வார இறுதி விடுமுறை நாட்களில் இந்த பைக்ரேஸ்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது.எனவே வார இறுதி நாட்களில் திருமங்கலம் நகரின் உள்ளுர் சாலை வழியே நடைபெறும் இந்த பைக்ரேஸினால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்னதாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து