முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்ப்க்கு எதிராக கண்டன கோஷங்கள் அமெரிக்க தூதரகத்தை இந்தோனேசியர்கள் முற்றுகை

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

ஜகர்தா: இந்தோனேசிய தலைநகரான ஜகர்தாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தோனேசியர்கள் பேரணியாக வந்து அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடிவெடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
 
அமெரிக்க தூதரகம் முன் திரண்டிருந்த போராட்டக்காரர்கள், அமெரிக்க தூதரகமே அல் காட்ஸ்சிலிருந்து வெளியேறு, ஜெருசலேத்தையும் பாலஸ்தீனர்களையும் சுதந்திரமாக இருக்கவிடு, நாங்கள் பாலஸ்தீனர்களோடு இருக்கிறோம் என்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அல் காட்ஸ் என்பது அரபு மொழியில் ஜெருசலேம் என்பதை குறிப்பதாகும்.

இஸ்லாமிஸ்ட் பிராஸ்பெரஸ் ஜஸ்டிஸ் கட்சி இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்தோனேசிய அதிபர் ஜோகோ ஜோவாய் விடோடோ, அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளதோடு, ஐ.நா.தீர்மானங்களை மீறும் வகையிலானது என்று கூறியுள்ளார். உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் ஐ.நா.வும் அமெரிக்க அதிபரின் முடிவை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து