முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் வளர்ச்சி குறித்து மோடி ஏன் பேசுவதில்லை: ராகுல் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: குஜராத் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி ஏன் பேசுவதில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது சில நாட்களாக ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வந்தார். மேலும் வளர்ச்சி, முன்னேற்றம் தொடர்பான எந்த வாக்குறுதியையும் பா.ஜ.க நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்ட் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளதாவது, “பிரதமர் மோடி பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால் அவரது தேர்தல் பிரச்சார பேச்சுகளில் குஜராத் வளர்ச்சி என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. அது ஏன்?

குஜராத்தின் வளர்ச்சி தொடர்பாக நான் இதுவரை 10 கேள்விகளை எழுப்பியிருந்தேன். ஆனால் ஒன்றுக்கு கூட இதுவரை பதில் வரவில்லை. 22 ஆண்டுகளாக குஜராத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஆனால் வளர்ச்சி மட்டும் ஏற்படவில்லை. குஜராத் பேரவைத் தேர்தல் முதல்கட்ட பிரச்சாரம் நிறைவடையும் வரை பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவே இல்லை. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை வாக்குறுதிகளை மட்டுமே அள்ளித் தெளித்து வருகிறது. ஆனால் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை” என்று ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பதான் மாவட்டம் ஹரிஜ் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் பேசும்போது, “நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக மோடி அரசு எதையும் செய்யவில்லை. விளம்பரங்களுக்காக மட்டும் இதுவரை ரூ.3,700 கோடியை செலவு செய்துள்ளது பா.ஜ.க அரசு. ஆனால் காங்கிரஸ் அரசு வந்தால் மக்கள் பணம், மக்களின் சுகாதார நலனுக்கும், கல்விக்கும் பயன்படுத்தப்படும். நர்மதை நதி நீர் திட்டத்தை நிறைவேற்றியதை வைத்து வாக்குகளைப் பெறுவேன் என்று மோடி கூறினார். அந்த நதி நீர் டாடா நானோ தொழிற்சாலைக்குச் சென்றுவிட்டது. மக்கள் இந்த உண்மையை புரிந்துகொண்டனர். ஏழை விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறித்து டாட்டா நானோ தொழிற்சாலையிடம் கொடுத்தவர்தான் மோடி” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து