முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மாவதி படத்துக்கு தடை இல்லை - பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

சண்டிகர் - பிரபல இயக்குனர் சஞ்சய் ஹீஹா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே ரன்வீர் சிங்,ஷாகித்கபூர் நடித்துள்ள இந்திப் படம் பத்மாவதி. ராஜஸ்தான் மாநில மேவார் பகுதியை ஆண்ட ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் அலாவுதீன் கில்ஜியாக நடித்துள்ள ரன்வீர் சிங்குக்கும், ராணி பத்மினியாக நடிக்கும் தீபிகா படுகோனேவுக்கும் இடையே காதல் மலர்வது போல் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பத்மாவதி படத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ராஜபுத்ர வம்சத்தினரும் இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர். உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த படத்தை திரையிட  அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இதனால் ரூ. 100 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டது. கடந்த 1ம் தேதி இந்த படத்தை திரையிட திட்டமிட்டு இருந்தது.

இந்த நிலையில் பத்மாவதி படத்துக்கு பஞ்சாப் மாநிலத்தில் தடை இல்லை என்று அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தா சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்திலும் படத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பத்மாவதி படத்தை பஞ்சாப் அரசு அனுமதிக்கும். அதை தடுத்து நிறுத்த மாட்டோம். படத்தை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து