முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூதருடன் மணிசங்கர் ரகசிய ஆலோசனை நடத்தியது ஏன்? குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயற்சி பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

காந்திநகர்: பாகிஸ்தான் தூதருடன் மணிசங்கர் ஐயர் ரகசிய ஆலோசனை நடத்தியது ஏன்? என்று வினவிய பிரதமர் மோடி, குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயற்சிப்பதாக பிரச்சார கூட்டத்தில் குற்றம் சாட்டினார்.

குஜராத்தில் 89 சட்டசபை தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் 2வது கட்ட வாக்குப் பதிவு 93 தொகுதிகளுக்கு  வரும் 14ம் தேதி நடைபெறவுள்ளது. 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பா.ஜ.க.வும் , காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. பிரதமர் மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் குஜராத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

குஜராத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி பிரதமரை கடுமையாக விமர்சித்து இருந்தார். குஜராத்தில் இப்போது நடைபெறுவது சட்டசபை தேர்தல். பிரதமருக்கான தேர்தல் அல்ல என்றும், பிரதமர் மோடி குஜராத் மாநில வளர்ச்சி பற்றி தனது பிரச்சாரத்தில் எதுவுமே பேசவில்லை என்று ராகுல் விமர்சித்து இருந்தார்.

அது மட்டுமல்லாது, குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் வெளியிட்ட சில போஸ்டர்களில் அகமது படேலை முதல்வராக்க வாக்களியுங்கள் என இடம்பெற்றிருந்தது.

இதனை குறிப்பிட்டு பனஸ்கந்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர் அய்யர் குஜராத்தை இழிவுபடுத்தினார். அவர் பாகிஸ்தான் தூதருடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதற்கு என்னதான் காரணம்? பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் அகமது படேல், குஜராத் முதல்வராக வேண்டும் என எழுதுவது எதற்காக? இவ்வாறு பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். ஆனால் பா.ஜ.க.வினரின் இந்த குற்றச்சாட்டை அகமது படேல் மறுத்துள்ளார். நான் எப்போதுமே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து