முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எதிரொலி: தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட தமிழகம், புதுவையில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், மழைக்கு வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் தொடங்கியது. ஆரம்பத்தில் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. ஓகி புயல் தாக்கத்தினால் நவம்பர் இறுதியில் தென் தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்தது. குமரி, நெல்லை மாவட்டத்தில் அணைகள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில் தெற்கு இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், ஆனால் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 1 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து