முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதிவுத்துறை மூலம் வழங்கப்படும் சேவையில் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : பதிவுத்துறை மூலம் வழங்கப்படும் சேவையில் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தி உள்ளதாக பதிவுத் துறை தலைமை செயலர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான பல்வேறு விதமான ஆவணங்களைப் பதிவு செய்வதுடன் பல்வேறு சட்டங்களின் கீழ் திருமணங்கள், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டுப் பங்காண்மை நிறுவனங்கள் ஆகியவற்றையும் பதிவுத்துறை பதிவு செய்கின்றது.  பதிவுத்துறை வசம் ஒப்படைக்கப்படும் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவேடுகளிலிருந்து உண்மை நகல்களும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
பதிவுத்துறை வாயிலாக வழங்கப்படும் சேவைகள் குறித்து குறைகள் ஏதும் இருப்பின் அதனைத் தெரிவிப்பதற்காக 1800 102 5174 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  எனவே பதிவுத்துறைத் தலைவரிடம் பொதுமக்கள் பதிவுத்துறை தொடர்பான குறைகள் ஏதும் தெரிவிக்க வேண்டும் என்று கருதினால் மேலே தெரிவிக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.  இவ்வாறு தெரிவிக்கப்படும் ஒவ்வொரு குறைக்கும் பதிவு எண் வழங்கப்படும்.  இப்பதிவு எண் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் பின்னர் இதே கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

பொதுமக்களிடமிருந்து கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகப் பெறப்படும் குறைகள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு பதிவுத்துறைத்  தலைவரால் நடவடிக்கை எடுக்கப்படும்.  கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 102  5174 அனைத்து அலுவலக நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்.இவ்வாறு பதிவு துறை தலைமை செயலர் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து