முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மாபெரும் பேரணி

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் போட்டியிடுகிறார், அவருக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், அதிமுக சார்பில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் வ.உ.சி நகர் மார்க்கெட் தெருவில் இருந்து பேரணி நடைபெற்றது. நேற்று மாலை நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் கலந்து கொண்டு வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தனர்,

1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

பேரணியின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், பேரணியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதல் தலைமுறை இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர், இரட்டை இலையும் அதிமுக கொடியும் நமக்கு தான் என்று தேர்தல் கமிஷன் தீர்ப்பளித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலானது தான் உண்மையான அதிமுக என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவும் வரவேற்பும் இருக்கிறது. அந்த வரவேற்பையையும் எழுச்சியையும் பார்க்கும் போது அதிமுக வேட்பாளர் மதுசூதனன் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. என்று அவர் தெரிவித்தார், இந்த பேரணி, வ,உசி நகர் மார்க்கெட் தெருவில் தொடங்கி அங்குள்ள அனைத்து இணைப்புத்தெருக்களில் நடைபெற்றது.

தமிழிசைக்கு மைத்ரேயன் சூடு

முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்த மைத்ரேயன், பணப்பட்டுவாடா குறித்து பேசும் தமிழிசை பணப்பட்டுவாடா நடைபெற்றால் அதற்கான உரிய ஆதாரத்தை கொடுக்க வேண்டும் அல்லது யார் செய்தார்களோ அவர்களை பிடித்து தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டும்,

டெபாசிட் கூட வாங்க முடியாத தமிழிசை அவதூறு குற்றச்சாட்டை முன்வைத்து விட்டு செல்கிறார் என்று அவர் குற்றம் சாட்டினார். மு.க.ஸ்டாலினும் இதே குற்றச்சாட்டை கூறி வருகிறார், கடந்த ஒராண்டாக அதிமுக ஆட்சிக்கு எதிராக நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறார், எதுவுமே பயனளிக்கவில்லை என்ற விரக்தியால் இப்போது பணப்பட்டுவாடா புகார் கூறுவதாக மைத்ரேயன் குற்றம்சாட்டினார், மேலும் லயோலா கருத்துக்கணிப்பு குறித்து பேசிய அவர் மக்கள் கருத்துகணிப்பு என்னவென்று தங்களுக்கு தெரியும். அதனால் மற்றவர்களுடைய கருத்தை நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை என்று தெரிவித்தார். தேர்தல் அதிகாரி மாற்றம் குறித்து பேசிய அவர் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் தேர்தல் அதிகாரி மாற்றப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்று அப்போது அவர் தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜி.பாஸ்கரன், அதிமுக எம்.பி.மைத்ரேயன், சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் செந்தில் நாதன் எம்.பி. உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து