முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாமில்டன் 2-வது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 373 ரன்கள் குவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

ஹாமில்டன் : ஹாமில்டனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்கள் குவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.

ஹோல்டருக்கு தடை

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வைட் பீல்டிங் தேர்வு செய்தார். ஒரே வருடத்திற்குள் இரண்டு முறை மெதுவாக பந்து வீசியதால் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டதால் பிராத்வைட் வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக செயல்பட்டார்.

முதல் நாள் ஆட்டம்

முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து (84), கிராண்ட்ஹோம் (58) ஆகியோரின் அரைசதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 87 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. பிளண்டெல் 12 ரன்னுடனும், வாக்னர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

2-வது நாள் ஆட்டம்

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிளண்டெல் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். வாக்னர் நேற்று முன்தினம் எடுத்திருந்த 1 ரன்னோடு வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு சவுத்தி உடன் டிரென்ட் போல்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது.

373 ரன்கள் குவிப்பு

சவுத்தி 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்கள் குவித்துள்ளது. போல்ட் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேப்ரியல் 4 விக்கெட்டும், ரோச் 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பிராத்வைட் 66 ரன்

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டனும், தொடக்க வீரரும் ஆன பிராத்வைட்-ஐ விட மற்ற வீரர்களான பொவேல் (0), ஹெட்மையர் (28), ஷாய் ஹோப் (15), சேஸ் (12), அம்ப்ரிஸ் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். டவ்ரிச் 35 ரன்களும், பிராத்வைட் 66 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்தின் நேர்த்தியான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது. ரெய்ஃபெர் 22 ரன்னுடனும், கம்மின்ஸ் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து