முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாகவி பாரதி பிறந்தநாள் விழாக் கூட்டம்

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் மகாகவி பாரதியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாக் கூட்டம் டி.பி.கே.ரோடு நற்பணி மன்ற அலுவலகத்தில் அதன் செயலாளர் மலரகம் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தியாகதீபம் அ.பாலு முன்னிலை வகித்தார். கவிஞர் சு.பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் “வாழும் நம் கவி” என்ற தலைப்பில் பேசுகையில் 39 ஆண்டுகால வாழ்வில் பன்முகப் பேராற்றலுடன் நமது அன்னைத் தமிழுக்கு வலிமை சேர்த்தவர் பாரதி.  பேசியபடி வாழ்ந்து, வாழ்ந்தபடி எழுதி, பொருளாதார பலவீனத்தைப் பொருட்படுத்தாமல் நேர்பட வாழ்ந்தவர். அடிமை தேசத்தில் அவரது எழுச்சி நிறைந்த பாடல்வரிகள் தேச உணர்வையும், விடுதலையின் தேவையையும் கடைக்கோடி மனிதனுக்கும் உணர்த்தியது. எந்த நிலையிலும் உண்மைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் வாழ்ந்த பாரதியை நமது வளரும் தலைமுறை முழுவதும் தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
 விழாவில் ஆர்.ரெங்கசாமி, சிவானந்தசீனிவாசன், ஏ.மோகன்குமார், எம்.செல்வம், கவிஞர்கள் மு.முருகேசன், மீ.ராமசுப்பிரமணியன், பி.ஹரிகரன் மற்றும் டி.ரமேஷ், வ.முத்து, நவப்ஜான், கே.அண்ணாமலை, பி.பன்னீர்செல்வம், வீ.காளீஸ்வரன், ஏ.சி.பாபுலால், ஜெ.ரவிசங்கர், வண்டியூர் மாணிக்கராஜ், டி.ஜேக்கப், ரெ.கார்த்திகேயன், ஆர்.வெங்கடேஷ், வி.எம்.ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டனர். பொருளாளர் சீ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து