முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயதான தம்பதியருக்கு சமூகபாதுகாப்புத்திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.-மதுரை மாவட்டத்தை பிச்சை எடுப்போர் இல்லா மாவட்டமாக உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,  07.12.2017 அன்று காலை வண்டியூர்; நேதாஜி சாலை, தீர்த்தக்காடு பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்த போது அதே பகுதியில் சாலையில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த வயதான தம்பதியரைக் கண்டு அவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விசாரணை மேற்கொண்டார். 
 இதில் அத்தம்பதியினர் தீர்த்தக்காடு பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர் திரு.பாண்டி (வயது:72), திருமதி.ஓடையம்மாள் - கண் பார்வையற்றவர் (வயது:70) என அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில் மேற்குறிப்பிட்ட வயதான தம்பதியருக்கு சமூகபாதுகாப்புத்திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகையாக மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணைகளை வழங்கி, வயதான காலத்தில் பிச்சை எடுக்க வேண்டாம் என்றும், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகையினை கொண்டு வாழ்க்கை நடத்த அறிவுரைகள் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து