முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      தேனி
Image Unavailable

தேனி.- தேனி மாவட்ட ஆட்சி;யர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட அளவில்; பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும், குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களில் சிறப்பாக செயல்பட்ட 29 ஒருங்கிணைப்பாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், 1986 ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை நினைவு கூர்வதற்காவே ஆண்டுதோறும் உலக நுகர்வோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வருவதற்கு முன்னர் பொருட்களை விற்பவர்களுக்கு எவ்வித கடமையும் இல்லை என்பது சட்டம். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நுகர்வோருக்கு உரிமைகளும், கடமைகளும் தரப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு, தகவல் பெறுவதற்கு, தேர்ந்தெடுப்பதற்கு, பிரதிநிதித்துவத்திற்கு, குறை தீர்ப்பதற்கு, நுகர்வோர் கல்விக்கு, சுற்றுச்சூழலுக்கு, அடிப்படை தேவைகள் போன்ற 8 உரிமைகள் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு இருப்பது, ஈடுபாட்டுடன் இருப்பது, சுற்றுச் சூழல் குறித்து பொறுப்புணர்ச்சி, கூட்டு முயற்சி போன்ற கடமைகளை நுகர்வோர்கள் கடைபிடித்திட வேண்டும்.
மக்கள் விழிப்புணர்வுடன் பொருட்களை வாங்கினாலே, பொருட்களின் தரம், எடை மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் ஏதும் இருக்கிறதா என்பதை தெரிந்து அறிந்து வாங்கிட வேண்டும். தரமற்ற, எடைக்குறைவு, மற்றும் போலியான பொருட்களை வாங்குவதையும், போலி விளம்பரத்தை பார்த்து ஏமாந்து தரமற்ற பொருட்களை வாங்குவதை நுகர்வோர் ஆகிய பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும். போலி விளம்பரங்களை பார்த்து ஏமாறாமல், தெளிவான சிந்தனையுடனும், எச்சரிக்கையுடனும், தரமுத்திரையினை பார்த்து பொருட்களை வாங்கிட வேண்டும். எந்தவித தகவலும் அச்சிடப்படாத பொட்டல பொருட்களை வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களது குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வுவை ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   தெரிவித்தார்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர்  தி.செ.பொன்னம்மாள்   மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்  தி.ந.ரசிகலா   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்   பொது விநியோத்திட்ட துணைப்பதிவாளர்  மணிகண்டன்   தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்  ராஜா   நுகர்வோர் மாணவர் மன்றங்களின் வழிகாட்டுதல் குழுத்தலைவர்  ப.புதுராசா நுகர்வோர் மன்றங்களைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து