முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் விருதுநகர் கலெக்டர் அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.- மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு ரூ.57,000 -மதிப்புள்ள விலையில்லா தேய்ப்பு பெட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  வழங்கினார்கள்.
 
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  சிவஞானம் தலைமையில்   நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு,  முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டத்தில் பொதுமக்கலிடமிருந்து பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிபிரிவின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்;.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், மாவட்ட ஆதிதிராவிடர் துறையின் மூலம் 19 பயனாளிகளுக்கு தலா ரூ.3000 - வீதம் மொத்தம் ரூ.57,000 -மதிப்புள்ள விலையில்லா தேய்ப்பு பெட்டியை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  இ.ஆனந்தகுமார், மாவட்ட பிற்;படுத்தப்பட்டோர் நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் (கலால்) சங்கரநாராயணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  கிருஷ்ணவேனி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து