தி.மலை உலக மாதா ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்சி பாடல் வழிபாடு

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      திருவண்ணாமலை

 

கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு தி.மலை உலக மாதா ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்சி பாடல் வழிபாடு நடந்தது. இதில் 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள உலக மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவினை முன்னிட்டு கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஆற்காடு லுத்தரன் திருச்சபை சார்பில் ஒருங்கிணைந்த கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்சி பாடல் வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பேரருட்பணி ஞானஜோதி தலைமை தாங்கினார்.

கிறிஸ்துமஸ் விழாவினை

வழிபாட்டில் கலந்து கொண்ட கிறிஸ்துவர்களை உலக மாதா பங்கு பேரவை இபார்ட் வரவேறார் ஒய்.ஜான்சன், டாக்டர் மனோவா, விஜயன், ஜுபர்ட் அருட்சகோதரி போஸ்கோ, ஜெயராஜ், இலாசர், வேதா, டேனியல் ஞானசேகர் ஆகியோர் இறைவார்த்தை அருளினர். ஆடையூர் அருள்இரக்க செவிலியர் பயிற்சி பள்ளி, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி, மவுண்ட் செயின்ஜோசப் மெட்ரிக்பள்ளி, கார்மேல் மெட்ரிக் பள்ளி, உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்சி பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்களை பேரருட்தந்தை மரியதாசன் ஆசீர்வதித்தார். முன்னதாக உலக மாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் ஜெப வழிபாடு நடைபெற்றது. முடிவில் அருட்தந்தை பிரசாத் நன்றி கூறினார்.

 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஒய்.ஜான்சன், திருத்தொண்டர் திணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து