மினி பஸ் மீண்டும் இயக்க அதிகத்தூர் கிராம பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      திருவள்ளூர்
Tvallur photo1

திருவள்ளுரில் இருந்து கடம்பத்தூர் வரை இயங்கி வந்த மினி பஸ் மீண்டும் இயக்க வலியுறுத்தி திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் எ.சுந்தவல்லியிடம் கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் அ.தி.மு.க ஊராட்சி கழக செயலாளர் எம்.எம்.முரளி தலைமையில் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கடந்த 5 வருடங்கள்

எங்கள் கிராமத்தில் 2000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.கடந்த 5 வருடங்களாக பிரசன்ன வினாயகர் என்ற பெயர் கொண்ட மினி பஸ் திருவள்ளுரில் இருந்து கடம்பத்தூர் வந்து கொண்டிருந்தது. திருவள்ளுரில் இருந்து மணவாளநகர், பட்டரை, தண்டலம், பிஞ்சிவாக்கம், அகரம் வழியாக கடம்பத்தூர் வரை சென்று கொண்டிருந்த மினி பஸ் கடந்த மூன்று மாதங்களாக வருவதில்லை என மனவில் கூறப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களின் நலனை கருதி மீண்டும் திருவள்ளுரில் இருந்து மணவாளநகர்,பட்டரை, தண்டலம், பிஞ்சிவாக்கம், அகரம் வழியாக கடம்பத்தூர் வரை மினி பஸ் இயக்க வேண்டும் என திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லியிடம் அதிகத்தூர் அதி.மு.க ஊராட்சி கழக செயலாளர் எம்.எம்.முரளி மற்றும் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் மனுவின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து