குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தோவாளை பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      கன்னியாகுமரி
kanyakumari collector

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிளை, கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்    நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

சீரமைப்பு பணி

அகஸ்தீஸ்வரம் வட்டம், கீழபுத்தேரியில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நெடுங்குளம் கால்வாய் மற்றும் விளாவடிகால் கால்வாய் உடைப்பினை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.தோவாளை வட்டம், இறச்சகுளம் கிராமத்தில் பெரியகுளம் கரை சீரமைப்பு பணிகளையும், இறச்சகுளம், நாவல்காடு மறுகால்தலை சாலையில் தென்பாறை குளம் கரை சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, ஈசாந்திமங்கலம்  ஊராட்சியில், ஓகி புயலால் சேதமடைந்த ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தை பார்வையிட்டு, விரைந்து சீரமைக்குமாறு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  மேலும், நங்காண்டி பகுதியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளையும், விவசாய நிலங்களில் வடிகால் கரைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.  பின்னர், தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஓகி புயலினால் சேதமுற்ற மரங்கள், கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை பார்வையிட்டதோடு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  அருமநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஓகி புயலால் சேதமடைந்த கட்டடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 இந்நிகழ்வுகளில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர்  வேத அருள்சேகர், உதவி செயற்பொறியாளர் வசந்தி, உதவி பொறியாளர்  வின்சென்ட் லாரன்ஸ், தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  பகவதிபெருமாள்,  கேத்ரின் மெர்சி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து