முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலித் மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் ஆதரவாளர்களுடன் புத்த மதத்திற்கு மாறப் போவதாக மாயாவதி எச்சரிக்கை

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

நாக்பூர், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடுவதை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க நிறுத்திக் கொள்ளாவிடில், தனது ஆதரவாளர்களுடன் புத்தமதத்திற்கு மாறப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலித் மற்றும் பிறப்படுத்தப்பட்ட மக்களையும், அவர்களின் தலைவர்களையும் ஜாதி ரீதியாகவும், மதரீதியாகவும் மரியாதை குறைவாக நடத்துவதை பா.ஜ.க நிறுத்திக் கொள்ள வேண்டும். - மாயாவதி

மகராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நடந்த இந்த மாநாட்டில் அக்கட்சித் தலைவர் மாயாவதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

‘‘இந்துவாக பிறந்த நான், இந்துவாக சாக விரும்பவில்லை என இதே நாக்பூரில் 1935ம் தேதி ஓர் அறிவிப்பை பாபாசாகேப் அம்பேத்கர் வெளியிட்டார். இந்துமத தலைவர்களுக்கு அவர் 21 ஆண்டுகள் அவகாசம் வழங்கினார். ஆனால், அவர்கள் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. எனவே 1956ம் ஆண்டு நாக்பூரில் அவர் புத்தமதத்திற்கு மாறினார்.

இதுபோன்ற மதமாற்றத்தால் இந்து சமூக தலைவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு, தலித் மற்றும் பிறப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய மரியாதையை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆனால், அவர்கள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை தொடர்ந்து சுரண்டுகிறார்கள். தலித் மற்றும் பிறப்படுத்தப்பட்ட மக்களையும், அவர்களின் தலைவர்களையும் ஜாதி ரீதியாகவும், மதரீதியாகவும் மரியாதை குறைவாக நடத்துவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நானும், எனது கோடிக்கணக்கான ஆதரவாளர்களும் புத்தமதத்திற்கு மாறுவோம்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.வினர் தங்கள் செயல்பாடுகளை சீர்திருத்தக் கொள்ளவும், மனநிலையை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு தருகிறேன். இல்லையென்றால் உரிய நேரத்தில் நான் மதம் மாறுவேன். மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதற்கு பகுஜன் சமாஜ் கட்சியே காரணம்’’ என மாயாவதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து