முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் பேச்சுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், குஜராத் தேர்தலில் தலையிடுவதாக பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் உங்கள் அரசியலில் எங்களை இழுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

குஜராத் சட்டசபைக்கு  முதல்கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 2-வது கட்ட வாக்குப்பதிவு வரும் 14ம் தேதி நடைபெறுகிறது. குஜராத் தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி, ‘‘காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேலை குஜராத் முதல்வராக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ முன்னாள் இயக்குநர் ஜெனரல் சர்தார் அர்ஷத் ரபிக் கூறியுள்ளார். இதன்மூலம் குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைமை விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று பேசினார். மற்றொரு கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ‘‘காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வீட்டில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்’’ என கூறினார்.

இதுபோலவே, ‘‘நான் பிரதமரான பிறகு மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் சென்றார். அங்கு சிலரைச் சந்தித்து, மோடியை நீக்க வேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளார்’’ எனவும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் குற்றம்சாட்டினார்.

இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாள் முகமது பைசல் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்திய அரசியல் தலைவர்கள் பாகிஸ்தானை வம்புக்கிழுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் தேர்தல் வெற்றிக்கு தங்கள் சொந்த வலிமையை நம்பாமல், சதி நடந்ததாக திரித்து கூறுவது அடிப்படை ஆதாரமற்றது, பொறுப்பற்றது’’ எனக் கூறியுள்ளார். இதுபோலவே பிரதமர் மோடியின் பாகிஸ்தான் தொடர்பான கருத்துக்கு காங்கிரஸூம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து