முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவில் 2018 முதல் திரைப்படங்களுக்கு அனுமதி

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

ரியாத் : சவுதி அரேபியாவில் 2018 முதல் திரைப்படங்கள் திரையிடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை அமலில் உள்ளது. திரைப்படங்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து திரைப்படங்கள் திரையிட அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு தகவல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அவாத் பின் சலே அலாவாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘‘‘திரைப்படங்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளோம். திரைப்படங்கள் திரையிட உரிமம் வழங்குவது குறித்து ஆடியோ வீடியோ ஊடக ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலனையை தொடங்கியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட வாய்ப்புள்ளது’’ எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து