முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ31 கோடி மதிப்பிலான 2,286 வழக்குகளுக்கு சமரச தீர்வு

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ31 கோடியே 90லட்சத்து 27 ஆயிரத்து 686 மதிப்பிலான 2,286 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் திருப்பூர்,அவினாசி,பல்லடம்,தாராபுரம்,காங்கயம்,உடுமலை ஆகிய 6 தாலூக்கா கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் 15 அமர்வுகளாக நடத்தப்பட்டது.
திருப்பூரில் நடந்த 2 அமர்வுகளை திருப்பூர்  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும்,முதன்மை மாவட்ட நீதிபதியுமான அலமேலு நடராஜன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.முதன்மை சார்பு நீதிபதி முரளீதரன் முன்னிலைவகித்தார்.கூடுதல் மாவட்ட நீதிபதிகள் ஜமுனா,முகம்மது ஜியாவுதீன்,மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி,மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகன ரம்யா,குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் கவியரசன்,பழனி,நித்யகலா மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் பத்மநாபன்,குப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்டம் முழுவதும் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 4ஆயிரத்து 110 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதில் வங்கி வராக்கடன் தொடர்பாக 31 வழக்குகள்,மாநகராட்சி தொடர்பான 27வழக்குகள்,969 சிற்குற்ற வழக்குகள்,மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பாக 537வழக்குகள் உள்பட மொத்தம் 2ஆயிரத்து 286 வழக்குகளுக்கு ரூ31கோடியே 90லட்சத்து 27ஆயிரத்து 686 மதிப்பில் சமரச தேர்வு காணப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும்,அந்தந்த தாலூக்கா வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து