முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க சுப்ரீ்ம் கோர்ட் இடைக்கால தடை

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு தொடங்கியுள்ள ஜவாஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகளில் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, நவோதயா பள்ளிகளின் சமிதி சார்பில் புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் ஆஜராகினார்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் முதன்மை பாடமாகவும், 11, 12 ஆம் வகுப்புகளில் கூடுதல் பாடமாகவும் தமிழ் கற்பிக்கப்படும் என்று வெங்கடேஸ்வரன் தெரிவித்திருந்தார். இதை பதிவு செய்த ஐகோர்ட் கிளை, இதே வாதத்தை நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குநர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதே போல, நவோதயா பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பாக தமிழக அரசின் முடிவை தெரிவிக்க கோர்ட் அவகாசம் வழங்கியிருந்தது.

இதனிடையே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான தடையில்லா சான்றை 8 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியது தமிழக அரசு. நவோதயா பள்ளிகள் அமைக்க போதிய கால அவகாசம் தேவை என்பது தமிழக அரசின் வாதம். நவோதயா பள்ளிகளை அமைக்க போதிய இட வசதி இல்லை என்பதும் தமிழக அரசின் வாதமாகும். இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைக்கும் ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவிற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து