முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு - காஷ்மீரில் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் :   ஜம்மு - காஷ்மீரில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 4.28 மணியளவில் ஜம்மு - காஷ்மீர் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகியுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்களில் அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. தொடரும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து