முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரியாதை செய்ய வந்த ஆசிரியரை கவரவப்படுத்திய ராஜ்நாத்சிங்

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ, அமைச்சரான பிறகு தனக்கு மரியாதை செய்ய வந்த ஆசிரியரை தான் கவுரவப்படுத்தியதை மாணவர்களிடம் ராஜ்நாத் சிங் கூறி நெகிழ்ந்தார்.

உத்தரபிரதேசத்தில் லக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர், தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இதில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

நான் பள்ளியில் படிக்கும்போது உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தவர் மிகவும் கண்டிப்பானவர். ஒழுங்காக நடக்கவில்லை என்றால் பிரம்பால் அடிப்பார். மாநில கல்வி அமைச்சராக ஆன பிறகு ஒரு நாள் என் சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். வழியில் மக்கள் வரவேற்பு அளித்தனர். சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த 90 வயது பெரியவரை பார்த்தவுடன் அவர் எனது ஆசிரியர் என்பதை அடையாளம் கண்டேன். உடனடியாக காரை விட்டு இறங்கி எனக்கு அணிவிப்பதற்காக கையில் மாலையுடன் நின்றிருந்த ஆசிரியரிடம் இருந்து மாலையை வாங்கி அவருக்கே அணிவித்துவிட்டு, காலில் விழுந்து ஆசி வழங்க கோரினேன். எனது ஆசிரியர் அழுது விட்டார். அதைப் பார்த்து நானும் உணர்ச்சி வசப்பட்டேன். ஆசிரியர்கள் நமது உயர்வுக்கு வழிகாட்டுபவர்கள். அவர்கள் மீது மாணவர்கள் அன்பும் மரியாதையும் செலுத்த வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து