முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

95 வது பிறந்த நாள் காணும் நடிகர் திலீப்குமாருக்கு பிரியாணி, ஐஸ் கிரீம் கொடுக்க மனைவி ஐடியா

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : பழம்பெரும் புகழ் பெற்ற இந்தி நடிகர் திலீப்குமார், பாலிவுட் உலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தார். முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் மனைவி சாய்ராபானுவுடன் மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். நடிகர் திலீப்குமாருக்கு நேற்று 95 வயதானது. அவர் பிறந்த நாளையொட்டி திலீப்குமாருக்கு பிரியாணி மற்றும் ஐஸ்கிரீம் கொடுக்க அவரது மனைவி சாய்ராபானு விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

எனது கணவரின் பிறந்த நாளை எளிமையாக கொண்டாட திட்டமிட்டுள்ளேன். பிரியாணியும், வெண்ணிலா ஐஸ்கிரீமும் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு பிறந்த நாளில் பிரியாணியும், வெண்ணிலா ஐஸ்கிரீமும் கொடுக்க முடிவு செய்துள்ளேன். டாக்டரிடம் கேட்டு அவர்கள் சொன்னால் மட்டுமே இவற்றை கொடுப்பேன்.

அவருக்கு லட்சக்கணக்கான மக்கள் உடல் நலம் பேண பிரார்த்தனை செய்வார்கள் என்று எனக்கு தெரியும். இவ்வாறு சாய்ரா பானு தெரிவித்தார்.

சாய்ராபானுவும் புகழ் பெற்ற இந்தி நடிகை. கடந்த 1966ல் இவர்களது திருமணம் நடந்தது. திலீப்குமாரை விட 22 வயது குறைவானவர் சாய்ராபானு என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து