முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் பழமைவாதிகளின் எதிர்ப்பையும் மீறி பிரபலமாகும் யோகா

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பழமைவாதிகளின் எதிர்ப்புகளைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளாக யோகாசனம் பிரபலமாகி வருகிறது.

பாகிஸ்தானில் அதிகாரபூர்வமாக யோகா தடை செய்யப்படவில்லை. ஆனால் பழமைவாத அமைப்புகள் யோகாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த எதிர்ப்பை தாண்டி அந்த நாட்டில் யோகாசனத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் பொதுஇடங்கள் மற்றும் பூங்காக்களில் ஆண்களும், பெண்களும் பகிரங்கமாக யோகா பயிற்சியில் ஈடுபடுகின்றனர். லாகூரில் உள்ள ரேஸ் கோர்ஸ் பூங்காவில் நாள்தோறும் காலையில் 400-க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்கின்றனர். தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட முக்கிய நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட யோகா பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. பெண்களுக்காக தனியாக யோகா பயிற்சி மையங்களும் உள்ளன.

பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் யோகாவை இந்து மதம் சார்ந்ததாக பார்க்கவில்லை. மிகச் சிறந்த உடற்பயிற்சியாக கருதுகின்றனர். பயிற்சி மையங்களைத் தாண்டி ‘யூ டியூப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் யோகா கற்பதில் பாகிஸ்தானியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பாகிஸ்தானின் பாபா ராம்தேவ் என்று அழைக்கப்படுகிறார் யோகி ஹைதர். இவர் லாகூரில் மிகப்பெரிய யோகா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இவரது மையத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோகாசனம் கற்கின்றனர். அவர் கூறியபோது, “அதிகாலை நமாஸுக்கு பிறகு பெரும்பாலான முஸ்லிம்கள் யோகாசனம் செய்கின்றனர். யோகா மூலம் மனநலம் மேம்படுகிறது. உடல் வலுவாகிறது. என் மையத்தில் முஸ்லிம் மத குருக்களும் யோகாசனம் கற்கின்றனர். ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி பாகிஸ்தானின் பல நகரங்களில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சிகளில் நாள்தோறும் காலை நேரங்களில் 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை யோகாசன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து