முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலிபோர்னியாவை சுற்றி வளைத்த 6 காட்டுத் தீ: நாசா வெளியிட்ட பகீர் புகைப்படம்

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

கலிபோர்னியா,  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகள் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாகாணத்தை மொத்தம் 6 காட்டுத் தீக்கள் சூழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.
 
சாண்டா ரோசா, சாண்டா பார்பாரா பகுதிகளில் ஆரம்பித்த காட்டுத் தீ தற்போது லாஸ் ஏஞ்சல்சுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. இது இந்த மாதத்தில் ஏற்படும் ஏழாவது காட்டுத் தீ ஆகும். மேலும் இந்த காட்டுத் தீ காரணம் நிறைய உயிர் சேதங்கள் ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் கொத்து கொத்தாக தங்கள் இருப்பிடங்களை காலி செய்து வெளியே சென்று கொண்டு இருக்கிறார்கள்.

கலிபோர்னியாவில் காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் காட்டுத் தீ ஏற்படுவதற்கு பெயர் போனது. வருடத்தில் அதிக நாட்கள் இந்த மாகாணம் காட்டுத் தீயால் பாதிக்கப்படும்.சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் காட்டுத் தீ சீசன் அங்கு தொடங்கியது. கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு அங்கு பெரிய காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது தாமஸ், ரே, லீலாக், ஸ்கிர்பால், லிபர்டி என்ற ஐந்து காட்டுத் தீயும் பெயர் சூட்டப்படாத புதிய காட்டுத்தீ ஒன்றும் அங்கு உருவாகி இருக்கிறது.

 இந்த காட்டுத் தீக்களில் தாமஸ் காட்டுத் தீ மிகவும் அதிக சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சாண்டா பார்பாரா பகுதியில் ஆரம்பித்த தீ தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் வரை பரவி உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு இதனால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரே நாளில் 6 காட்டுத் தீ ஏற்படுவது கலிபோர்னியாவில் இதுவே முதல்முறையாகும்.

நாசாவின் புகைப்படம்

தற்போது இந்த தீ குறித்து நாசா புகைப்படம் வெளியிட்டு இருக்கிறது. வெவ்வேறு வகையில் ஸ்கேன் செய்யப்பட்டு இந்த புகைப்படங்கள் செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. 'சுயோமி என்பிபி'' என்று சாட்டிலைட் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது. இதில் கலிபோர்னியாவில் தீ பரவி இருப்பது கண்கூடாக அப்படியே தெரிகிறது. மேலும் கலிபோர்னியாவில் இரவில் எடுக்கப்பட்ட புகைப்படம் பீதியை கிளப்பும் வகையில் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து