முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமியை கடந்து சென்ற வித்தியாசமான விண்கல் ஆராய 650 கோடி கொடுக்கும் தொழிலதிபர்

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, பூமியை கடந்து சென்ற வித்தியாசமான விண்கல் குறித்து ஆராய ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் 650 கோடி ரூபாய் பணம் கொடுக்க முடிவு செய்து இருக்கிறார். இந்த விண்கல் சரியாக ஒரு வாரத்திற்கு முன் பூமிக்கு அருகில் வந்தது. இன்னும் இந்த விண்கல் பூமியை முழுதாக தாண்டி செல்லாத நிலையில் தற்போது இதுகுறித்து ஆராய்ச்சி செய்ய அந்த ரஷ்ய தொழிலதிபர் முடிவு செய்து இருக்கிறார். அந்த விண்கலத்தில் ஏலியன்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது.

 சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு பூமிக்கு அருகில் வித்தியாசமான விண்கல் ஒன்று வந்தது. பார்ப்பதற்கு சிகரெட் வடிவில் இருக்கும் இந்த விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது. உலகிலேயே முதல் முறையாக பூமிக்கு சொந்தம் இல்லாமல் வானத்தில் பறந்த முதல் பொருள் இதுதான். இது மற்ற கற்களை போலவோ எரிநட்சத்திரம் போலவோ இல்லாமல் பறக்கும் பொருள் போல இருக்கிறது.
இந்த நிலையில் இந்த விண்கலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. அதன்படி இதை கண்டுபிடித்தவர்கள் இதற்கு 'ஒமுஅவுமா' என்று பெயர் வைத்தார்கள். மேலும் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்ய தொடங்கினார்கள். மேலும் இந்த விண்கல் இன்னும் சில தினங்களில் மொத்தமாக பூமியை கடந்து சென்றுவிடும் என்பதால் இதில் தீவிரமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

 தற்போது அதன் உள்ளே ஏலியன் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் 'யூரி மில்னர்' 650 கோடி பணம் கொடுத்து ஆராய்ச்சி நடத்த இருக்கிறார். அதன்படி 30க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இந்த விண்கலம் பூமியை கடந்து செல்வதற்கு முன் அதை ஆராய்ச்சி செய்து முடித்து இருப்பார்கள். அதற்குள் ஏலியன் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க இந்த முயற்சி செய்யப்படுகிறது.

எப்படி ஆராய்ச்சி இந்த ஆராய்ச்சிக்காக அந்த விண்கலத்திற்கு சில சிக்னல்கள் அனுப்பப்படும். அந்த சிக்னல்களுக்கு பதில் வரும் பட்சத்தில் அதற்குள் ஏலியன் இருப்பது உறுதியாகும். ஆனாலும் இந்த ஆராய்ச்சி தேவையில்லாத செலவு என்றும் ரஷ்யாவை சேர்ந்த அறிஞர்கள் சிலர் தெரிவித்து இருக்கின்றனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து