முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பத்தில் தென் மாவட்ட அளவில் கராத்தே போட்டி

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      தேனி
Image Unavailable

கம்பம்,- தேனி மாவட்டம் கம்பத்தில் தென் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கம்பம்,குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குலாளர் மண்டபத்தில் நடைபெற்றது.இப் போட்டியில் தேனி,திண்டுக்கல்,மதுரை சிவகங்கை,இராமநாதாபுரம்,மற்றும் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.வயது,எடை,பெல்ட் வாரியாக நடைபெற்ற போட்டிகளில் கட்டா,குமிட்டே என இரு பிரிவுகளில் வீரர்கள்,வீராங்கனைகள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.ஜீனியர் பிரிவில் கம்பம் இராமஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சூப்பர் ஜீனியர் பிரிவில் கம்பம் செயின் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி,சீனியர் பிரிவில் உத்தமபாளையம் அல் அல்ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,சூப்பர் ஜீனியர் பிரிவில் உத்தமபாளையம் கிரசன்ட் மெட்ரிக் பள்ளி ஆகியவை முதலிடம் பிடித்தனர்.ஜீனியர் பிரிவில் இரண்டாம் இடத்தை ஆண்டிப்பட்டி ஸ்ரீ பாலாஜி மெட்ரிக் பள்ளியும் சூப்பர் ஜீனியர் பிரிவில் இரண்டாம் இடத்தை கம்பம் ஆர்.ஆர்.இண்டர் நேஷனல்  பள்ளியும் பெற்றனர்.வயது பிரிவில் சின்னமனு£ர் தாய் மெட்ரிக்குலேசன் பள்ளி முதலிடம்,ஆண்டிப்பட்டி ஏஞ்சல் வித்யா மந்திர் இரண்டாம் இடத்தையும் எடை பிரிவில் ஆண்டிப்பட்டி எஸ்.ஏ.கே.மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதலிடத்தையும்,தேனி நாடார் துவக்கப்பள்ளி இரண்டாம் இடத்தையும் ,தேனி நாடார் ஜீனியர் வித்யாலாயா மூன்றாமிடத்தையும் பெல்ட் பிரிவில் முத்துத் தேவன் பட்டி நாடார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதலிடத்தை பிடித்தனர்.சின்னமனு£ர் பிரான்சீஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.போட்டியின் நடுவர்களாக சென்சாய்,இராமமூர்த்தி,வனராஜ்,கண்ணன்,முத்துக் குமார்,சென்றாய பிரபு,பார்த்திபன்,ரியாஸ்,குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.போட்டிக்கான ஏற்பாடகளை ஆலன் திலக் சிட்டோ£ரியோ கராத்தே தேனி மாவட்ட பொறுப்பாளர் கராத்தே இராமகிருஷ்ணன் வெகு சிறப்பாக செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து