முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாங்கல் குப்புச்சிபாளைய மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.75.43 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கு.கோவிந்தராஜ் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் குப்புச்சிபாளையத்தில் புதுவாங்கலம்மன் திருமணமண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நேற்று (12.12.2017) நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள்

இம்முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை வாயிலாக சிறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களால் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல்; 7 பயனாளிகளுக்கும், நத்தம் பட்டா 20 பயணாளிகளுக்கு ரூ-6,00,000 இலட்சம் மதிப்பிலும், பட்டா நகல் (நத்தம்) 38 பயனாளிகளுக்கும், வாரிசு சாண்று 5 பயணாளிகளுக்கும், முதியோர் உதவித்தொகை ரூ.60,00,000 மதிப்பில 50 பயனாளிகளுக்கும், இயற்கை மரண உதவித்தொகை ரூ.5,17,500 மதிப்பில் 23 பயனாளிகளுக்கும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 2 பயனாளிக்கு ரூ.16,000 மதிப்பில் திருமண உதவித்தொகையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 96 பயனாளிக்கு ரூ.2,39,500 மதிப்பில் கல்வி ஊக்க உதவித்தொகையும், புதிய குடும்ப அட்டை 20 பயனாளிகளுக்கும், வாரிசு சான்று 5 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.82,840 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.87,510 மதிப்பிலும் என மொத்தம் 270 பயனாளிகளுக்கு ரூ.75,43,350 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இம்முகாமில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசுகையில், தமிழக அரசு மக்களை நாடிச்சென்று தேவையை நிறைவேற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் அனைத்து பகுதிகளிலும் நேரடியாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாதம் ஒருமுறை ஒரு கிராமத்தை தேர்வு செய்து அங்கு அனைத்து துறை அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஜான்சிராணி, வேளாண் இணை இயக்குநர் பாஸ்கரன், இணைஇயக்குநர்(கால்நடை பராமரிப்புத்துறை) எஸ்.கதிர்வேல் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சீனிவாசன், சுகாதாரப்பணிகளின் துணை இயக்குநர் மரு.நளினி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) ராஜ்மோகன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஜெயந்தி, மாற்றுதிறணாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சாந்தி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலசுப்பிரமணியன், மாவட்ட சமூக நல அலுவலர் வள்ளியம்மை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கமணி , மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கவிதா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து