முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே. சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் முதற்கட்ட வரிசைப்படுத்தும் பணி

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      சென்னை
Image Unavailable

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் முதற்கட்ட வரிசைப்படுத்தும் பணி தொடங்கியது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ஆர்.கே.நகரில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் வாக்களிக்கத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே. சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் முதற்கட்ட வரிசைப்படுத்தும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், பொதுப்பார்வையாளர் செல்வி அல்கா ஸ்ரீவஸ்தவா, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் 50 இடங்களில் 256 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் 2 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, தற்பொழுது 258 வாக்குச்சாவடி மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 1400 வாக்காளர்களுக்கு மேலுள்ள மைய எண்-52 மற்றும் 236 ஆகிய வாக்குப்பதிவு மையங்கள் ஆண், பெண் வாக்குச்சாவடி மையங்களாக இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து10 ஆயிரத்து 903 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 232 பெண் வாக்காளர்களும், 99 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும், ஒரு வாக்குச்சாவடிக்கு 1 கட்டுப்பாட்டு கருவி, 4 வாக்குப்பதிவு இயந்திரம், 1 ஒப்புகைச் சீட்டு பார்க்கும் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. 15 சதவீதம் இருப்பில்(15% reserve) கட்டுப்பாட்டு இயந்திரங்கள்-297, வாக்குப்பதிவு இயந்திரங்கள்-1187, 25 சதவீதம் இருப்புடன் (25% reserve) 323 (VVPAT) ஒப்புகைச் சீட்டு பார்க்கும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளது.

வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதற்கட்ட வரிசைப்படுத்துதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) முத்துகுமாரசாமி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து