முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை - குஜராத் இடையே கரையை கடந்த ஓகி புகைப்படத்தை வெளியிட்ட நாசா

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை :  மும்பை ஓகி புயல் மும்பை - குஜராத் இடையே கரையை கடந்த போட்டோவை நாசா வெளியிட்டுள்ளது.

அண்மையில் வங்கக்கடலில் உருவானது ஓகி புயல். கடந்த 30ஆம் தேதி காலை கன்னியாகுமரியை நெருங்கியது. கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த இந்தப் புயல் கரையை கடக்காமலே கோர தாண்டவம் ஆடியது.

இந்த ஓகி புயல் தென் தமிழகம் மற்றும் தெற்கு கேராள ஆகிய மாநிலங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டன. ஓகி புயலால் கொட்டிய மழையால் தென் தமிழகம் வெள்ளக்காடானது.

தெற்கு கேரளாவையும் வச்சு செய்த இந்த புயல் லட்சதீவையும் பதம்பார்த்தது. பின்னர் கடலிலேயே ட்ராவல் செய்த இந்த புயல் கடந்த 5ஆம் தேதி குஜராத் மும்பை இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டது. இதனால் சூரத் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. ஆனால் இந்த புயல் கடந்த 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பலவீனமடைந்தது.

இந்நிலையில் பலவீனமடைந்த இந்த புயல் கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் குஜராத் மும்பை இடையே புகை மூட்டமாக கடக்கும் புகைபடத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்தப்புகைப்படங்கள் இயற்கை நிறத்துடன் சுயோமி என்பிபி மற்றும் நாசாவின் அக்வா செயற்கைகோளால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து