முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒருநாள் போட்டி: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

மெகாலி : தரம்சலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய அணி இன்று மொகாலியில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

இலங்கை வெற்றி

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 ஒருநாள் தொடரில் தர்மசலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நெருக்கடியில் ...

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று (13-ந்தேதி) நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இருக்கிறது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்துவிடும். தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, அந்த பெருமையை இழக்காமல் இருக்க வெற்றிக்காக கடுமையாக போராடும். மேலும் தரம்சாலாவில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

டோனி ஒருவர்...

முதல் போட்டியில் இந்திய வீரர்கள் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அனுபவம் வாய்ந்த முன்னாள் கேப்டன் டோனி ஒருவர் மட்டுமே சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். மோசமான பேட்டிங்கால் வீரர்கள் தேர்வில் கேப்டன் ரோகித் சர்மா மாற்றம் செய்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க வீரர் என்ற முறையில் ரகானே நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு மிடில் ஆர்டர் வரிசையில் அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுக்கலாம். டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி மீண்டும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. தரம்சாலா போட்டியில் விளையாடிய உத்வேகத்தை இன்றைய ஆட்டத்திலும் பெரேரா தலைமையிலான இலங்கை அணி பின்பற்றும்.

157-வது போட்டி

இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் மொகாலி போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இன்று மோதுவது 157-வது போட்டியாகும். இதுவரை நடந்த 156 போட்டியில் இந்தியா 88-ல், இலங்கை 56-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 11 போட்டி முடிவு இல்லை. இன்றைய ஆட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து