முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து: 5 பேர் பலி

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் :  சீனாவில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர், 8 பேர் காயமடைந்தனர்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் சாவோயாங் மாவட்டத்தில் நேற்று  அதிகாலை இந்த விபத்து நடந்தது.

இதுகுறித்து சாவாயோங் மாவட்ட தீயணைப்புத் துறை, "ஷிபாலிடியான் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்தோம். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், 5 பேர் பலியாகினர்.காயமடைந்த 8 பேரும் ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்நிலை ஆய்வில், சார்ஜில் இடப்பட்டிருந்த இ-சைக்கிள் ஒன்றிலிருந்து கிளம்பிய புகையால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் பெய்ஜிங் நகரில் நடைபெறும் இரண்டாவது தீ விபத்து இதுவாகும். கடந்த நவம்பர் 19-ம் தேதியன்று ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகினர். 8 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோல் சீனாவின் மற்றுமொரு பிரபலமான பகுதியான குவான்டாங் மாகாணத்தில், கடந்த 10-ம் தேதி ஒரு குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர். டிசம்பர் 1-ம் தேதியன்று டியான்ஜின் பகுதியில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து