முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி : சி.பி.ஐ கோர்ட் தீர்ப்பு

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடாவை டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் தண்டனை விவரம் இன்று  தெரியும்

2006- 2008 ஆம் ஆண்டு காலத்தில் ஜார்க்கண்ட் முதல்வராக இருந்தவர் மதுகோடா. தமது ஆட்சி காலத்தில் மேற்கு வங்க தனியார் நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கீடு செய்தார் என்பது குற்றச்சாட்டு.

இது தொடர்பாக மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஏ.கே. பாஸ் உள்ளிட்டோர் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இவ்வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து நேற்று டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து