முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு: டிச. 31 -காலக்கெடு நிறுத்தி வைப்பு மத்திய அரசு உத்தரவு

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: வங்கிக் கணக்கு, பான் எண்ணுடன், ஆதார் எண் இணைப்பதற்கான டிசம்பர் 31-ம் தேதி காலக்கெடுவை நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மத்திய அரசின் சமையல் எரிவாயு, மதிய உணவு, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்டங்கள் மற்றும் வங்கி உட்பட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வலியுறுத்தப்பட்டது.

பின்னர் வருமான வரி கணக்கு நிரந்தர எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. புதிதாக பான் எண் பெற விரும்புபவர்களும் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று அறிவித்தது.

இதில் வங்கிக் கணக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளுடன் ஆதார் எண் இணைப்பதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது, ''பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை 2018 மார்ச் 31 வரை நீட்டிக்க தயார். எனினும் மொபைல் எண்ணுடன் ஆதாரை, 2018 பிப்ரவரி 6-ம் தேதிக்கு முன் இணைக்க வேண்டும் என்ற காலக்கெடுவில் மாற்றம் இல்லை'' என்று மத்திய அரசு தெரிவித்தது.

அதன்படி, 2018 மார்ச் 31 வரை பான் எண்ணுடன் ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் வங்கி கணக்கு மற்றும் பான் எண்ணுடன், ஆதார் எண் இணைப்பதற்காக அறிவிக்கப்பட்டு இருந்த டிசம்பர் 31-ம் தேதி காலக்கெடுவை நிறுத்தி வைத்த மத்திய அரசு நேற்று (புதன்) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு ஏற்றவகையில் 2002-ம் ஆண்டின் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆலோசனை பெற்று இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதாகவும், அரசு புதிய தேதி அறிவிக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து