முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: ரோகித் இரட்டை சதம் அடித்து உலக சாதனை

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

மொகாலி : இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தனது 3-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில்

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று நடைப்பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி மண்ணை கவ்வினால், சொந்த மண்ணில் இலங்கையுடன் தொடரை இழந்ததில்லை என்ற நீண்ட கால பெருமையை பறிகொடுக்க வேண்டி இருக்கும் என்ற நிலையில் இந்திய அணி தொடக்கம் முதலே அபாரம் காட்டியது.

ஆரம்பமே அமர்க்களம்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சை துவைத்து எடுத்தார். போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்து, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. முதல்நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். நேற்றைய போட்டியில் அந்த தவறை செய்யக்கூடாது என்பதில் தொடக்க ஆட்டக்காரர்கள் உறுதியாக விளையாடினர். தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா நேர்த்தியான ஆட்டம் மூலம் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்திய அணி 21.1 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து இருந்த போது ஷிகர் தவான் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரோகித் ஷர்மாவுடன் கை கோர்த்த ஷ்ரேயாஸ் ஐயரும் தன்னுடைய வேகத்தை காட்டினார். இருவரும் இலங்கை அணிக்கு எதிராக சவாலான ஒரு கூட்டணியை அமைத்து விளையாடினர்.

393 ரன்கள் இலக்கு

45.3 வது ஓவரில் இந்தியா 328 ரன்களை எட்டிய போதுதான் இலங்கை அணிக்கு அடுத்த விக்கெட் கைக்கு எட்டியது. ஷ்ரேயாஸ் ஐயர் 88 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இரட்டை சதம் நோக்கி விளையாடிய ரோகித் ஷர்மாவுடன் இந்தியாவின் நட்சத்திர வீரர் டோனி இணைந்தார். ஆனால் முதல்நாள் ஆட்டம் போல் டோனி நீடிக்கவில்லை. 5 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். 49.3 வது ஓவரில் ரோகித் ஷர்மா இரட்டை சதம் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தார். மைதானத்தில் இருந்த வீரர்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பி தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தனர். அடுத்த பந்தில் சிக்சர் அடித்து ரசிகர்களை மேலும் குஷிபடுத்தினார். கடைசி பந்தை எதிர்க்கொண்ட ஹர்திக் பாண்டியா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 392 ரன்கள் எடுத்து இருந்தது. இலங்கை அணிக்கு 393 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

உலக சாதனை

கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்தியா 147 ரன்களை குவித்தது, ரோகித் ஷர்மா இந்த ஓவர்களில் மட்டும் 99 ரன்களை அடித்தார். முதல் சதத்தை 115 பந்துகளில் அடித்தார், இரட்டை சதத்தை 36 பந்துகளில் எடுத்தார். இறுதியில் ரோகித் ஷர்மா 208 ரன்களில் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். அவரது ஸ்கோரில் 13 பவுண்டரிகளும், 12 சிக்சர்களும் அடங்கும்.  ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் ஷர்மாவின் மூன்றாவது இரட்டைசதம் இதுவாகும். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக இரட்டை சதம் எடுத்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து